உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகப் பொலிஸார் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமை காரணமாக, உயிர் காப்புப் பணிகளுக்கும் மற்றும் எந்தவொரு அனர்த்த நிலைமையிலும் ஈடுபடுத்தப்படுவதற்காகப் படகுகளுடன் கூடிய பொலிஸ் கடற்படைப் பிரிவின் அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, இந்தக் கடற்படைப் பிரிவின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பின்வரும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். 

பணிப்பாளர் / பொலிஸ் கடற்படைப் பிரிவு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச : 071-8591868

By RifkaNF