இரணைமடு 39′ தாண்டி உயர்ந்து வருகிறது (29.11.2025 அதிகாலை 3.00am)
அத்தனை கதவுகளும் திறந்துள்ளன, அணையின் வால்கட்டு (breaching section for emergency) வெட்டப்பட்டுள்ளது, நீர் வரத்து அதிகமாக உள்ளது. நீர் மட்டம் 39 அடியை மீறினால் மேலதிக நீர்வெட்டி விடப்பட்ட வால்க்கட்டினூடாக breaching section வட்டக்கச்சி பகுதிக்குள் உள்ள வலதுகரை பிரதான வாய்க்காலினூடாக வெளியேறி வீதியிலுள்ள தாழ்வான நீர்போக்கு பாதைகள் (causeway ) ஊடாக குறுக்கறுத்து கலிங்குடன் கலக்குமென எதிர்பார்க்ப்படுகின்றது
வட்டக்கச்சி மக்கள் அவதானமாக இருக்கவும். பன்னங்கண்டி பாதையை தவிர்த்து பரந்தன் வீதி வழியாக சுற்றி வட்டக்கச்சி மாயவனூர் வர முடியும். ஆனாலும் நீர்மட்டம் அதிகரிக்கும் பொழுது பரந்தன் முல்லை பாதையும் கண்டவளையில் தடைப்படலாம்

By RifkaNF