தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் 69-வது மற்றும் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (03) மாலை 6.45 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அரசியல் மற்றும் அதிரடிப் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில், விஜய்யின் அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“மக்களுக்கான தலைவன்” என்ற தொனியில் விஜய்யின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிரெய்லர் மூலம் அறியமுடிகிறது.
