நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரருக்கும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது இன்று (4) காலை. 10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக நயினாதீவு விகாராதிபதி கேட்டறிந்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி, பொதுமக்களின் காணி என்றும், தையிட்டி விகாரைக்காக ஒதுக்கப்பட்ட காணி இருந்தும் அதில் கட்டப்படாது குறித்த விகாரை பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டுள்ளதாகவும் நயினாதீவு விகாராதிபதி அண்மையில் கருத்து வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
