இன்று (06) நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை 14.2 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, நேற்று (05) அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 173.5 மி.மீ, அம்பாறை மாவட்டத்தின் லகுகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதிக்குள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி நிலையங்களில் பதிவான மழைவீழ்ச்சிக்கு அமைய இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
