டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அரிசித் தொகையைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அந்நாட்டின் யங்கோன் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும உள்ளிட்ட அந்நாட்டின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
