ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

போராட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளே இந்த அதிகளவான உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன. 

அவர்களில் அநேகமானோர் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

By RifkaNF