சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (21) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாமில் பெத்தும் நிஸ்ஸங்க, நிஷான் மதுசங்க, குஷல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, நுவன் பெர்ணான்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லாலகே,மிலான் ரத்நாயக்க,மஹீஸ் தீக்ஸன, ஜெப்ரி வென்டர்ஸே, அசித்த பெர்ணான்டோ, துஷ்மந்த சமீர, டில்சான் மதுசங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2வது போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.