கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரிய படுஓய பாலத்திற்கு அருகில் மாதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தானது, இன்று (12) அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 26 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

By RifkaNF