கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை முழுமையாக இயக்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் விஜயம்.

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்திறனை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ.வசந்த சமரசிங்க அவர்கள் பிரதி அமைச்சர் கெளரவ.உபாலி சமரசிங்க கூட்டுறவு அபிவிருத்தி ஆகியோருடன் அமைச்சின் பிரதிநிதிகள் இன்றையதினம் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இக்கள விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கே.இளங்குமரன்,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம்,மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள்,தலைவர் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம்,
தலைவர் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம்,கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலைய மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலைய கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளும் கலந்துகொண்டனர்.

மாவட்டஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி.

By RifkaNF