மட்டக்களப்பில் பிள்ளையானின் சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (24) குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்னையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
தற்போது, அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கிவந்த ரி.எம்.வி.பியின் முகாமின் பொறுப்பாளராக இருந்து வந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டு குற்ற விசாரணைப் பிரிவினால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.