தெதுரு ஓயா பெருந்துயர் -உயிர்பிழைத்த சிறுவனின் பதறவைக்கும் வாக்குமூலம்!

சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற குழுவில் இருந்த 10 பேர், நேற்று (05) பிற்பகல் தெதுரு ஓயாவின் பாலத்தின் கீழ்…

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து…

நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும்…

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி- மன்னார் உயர்தொழில்நுட்பவில் கல்வி நிறுவனத்தில்

தேசிய ஆபத்தானபோதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (National DangerousDrugs Control Board) மற்றும் மன்னார் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிலையம் (ATI Mannar) இணைந்து உயர்தொழினுட்பவியல் கற்கை மாணவர்களிற்கான “ஆபத்தான போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி” 06.11.2025 இன்று வெற்றிகரமாகநடைபெற்றது.…

பல்லேகலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பரவல்

கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (5) அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு…

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார்…

யானைகளை வனங்களுக்கு விரட்டும் நடவடிக்கை அமைச்சுக்குத் தெரியாது

ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் செயற்படுத்தப்படும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைக்கு சுற்றாடல் அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை, அது குறித்து அறிவிக்கவும் இல்லை என்று அவ்வமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், இந்த “யானை விரட்டும் நடவடிக்கை” குறித்த…

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு

இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற மற்றும் மிகப்பெரிய பயண வழிகாட்டி நிறுவனமான ‘லோன்லி பிளானட்’ (Lonely Planet) வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான உலகில் சுற்றிப்பார்க்க வேண்டிய சிறந்த 25 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் தெரிவாகி,…

கட்டுக்குறுந்த கடற்கரையில் 30,000,000/- பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்குறுந்த கடற்கரையில் இருந்து இன்று (05) காலை மீட்கப்பட்டது ஹஷிஷ் போதைப்பொருள் என தற்போது தெரியவந்துள்ளது. அங்கு சுமார் 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன், அதன் பெறுமதி 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாகம்…