இராணுவத்திற்கு புதிய பதவி நிலை பிரதானி நியமிப்பு
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது நேற்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தமிழ் இனப்படுகொலை? அரசாங்கத்தின் நிலைப்பாடு?
நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர்…
நயினாதீவு கடலில் தவறி வீழ்ந்து பாடசாலை அதிபர் பலி
நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்தார். அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும், பயணிகள் படகினை தவறவிட்டமையால், கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர். அதன்போது, சீரற்ற காலநிலையினால் அவர்கள் பயணித்த கடல் பகுதி கொந்தளிப்பாக…
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பதவி விலகல்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கபில பெரேரா தமது தீர்மானம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் விளக்கமளித்துள்ளதாகவும், செயலாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பொது…
வெசாக் பண்டிகை – நாட்டில் விசேட பாதுகாப்பு நடைமுறைக்கு
வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக…
IMF கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை 2.4 பில்லியன் டொலர்
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இதுவரை இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த…
உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு
ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும்…
சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் கைது
கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட பொலிஸார், உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளனர். நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட சீனப்…
தங்கம் வென்றார் தருஷி அபிஷேகா
ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் குறித்த போட்டியில், அவர் 04 நிமிடங்களும் 31 தசம்…
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து ஏழு இலங்கையர்கள் நாடு கடத்தல்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின்…
