அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு: தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!
ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவிப்பதற்காக, அந்த நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பாக ‘X’ தளத்தில்…
ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு
சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இதேவேளை,…
காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் பின்னர் காலி…
அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டார் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து தமது நாட்டுக்கு ஏவப்பட்ட மற்றுமொரு…
சவுதி அரேபியாவிலுள்ள CIA மையம் மீது ட்ரோன் தாக்குதல்
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இத்தாக்குதலின்…
மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது. ஃபிட்ஸ் எயார் (Fits…
போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்
ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக…
மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்து அரசின் நிலைப்பாட்டை கூறிய ஜனாதிபதி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்றத்தில் மத்திய கிழக்கின்…
அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை அமெரிக்க – இராஜாங்க அமைச்சு
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
ரியாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெடிப்புச் சம்பவம்
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த செய்திச்…
