நாட்டில் புதிய ரூ. 2000 நாணய தாள்கள் மக்கள் பாவனைக்கு!

இலங்கையில் புதிய ரூ. 2000 பெறுமதியான நாணயத் தாள்கள் மக்கள் பாவனைக்கு வெளிவந்துள்ளன. ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ரூ. 2000 நாணயத்தாள்கள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அந்த நாணயத்தாள் சாதாரண நாணயத்தாளின் அளவை விட பெரிதாக காணப்பட்டது. இந்தமுறை…

மீனவர்கள் வலையில் சிக்கும் அதிகளவான மீன்கள்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை – கல்முனை மீனவர்கள் வலையில் பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வகையான பாரிய சூரை மீன்கள் வளையா மீன்கள் என மீனவர்களால் பிடிக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய்…

அமெரிக்க நிர்வாக முடக்கம் தொடர்கிறது

அமெரிக்க அரச நிர்வாக முடக்கம் இரண்டாம் வாரத்திலும் நீடிக்கின்றது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதற்கான அறிகுறியும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிதி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஜனநாயகக் கட்சியினரின் பழைய…

இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஐ.வி

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும்…

லங்கா பிரிமியர் லீக்கில் இணையும் இந்திய வீரர்கள்!

இம்முறை இடம்பெறவுள்ள 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருபதுக்கு 20 வடிவமாக…

இன்று வானத்தில் தோன்றும் ‘சூப்பர் மூன்’

2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் பூரணை தினமான இன்று (6) வானில் காட்சியளிக்கவுள்ளது. வழமையாக வானில் தோன்றும் முழு நிலவை விட சுமார் 7% பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என்று ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப…

இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள் திறப்பு

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி…

பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு

பதுளை மாவட்டத்தை பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக, பசறை 13வது மைல்கல் அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பாறைகள் விழுந்து வீதி தடைபட்டுள்ள நிலையில், தற்போதுள்ள ஆபத்து காரணமாக, ஒரு மருங்கை மாத்திரம் திறந்து வைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை…

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் நாளாந்தம் சேவையில்

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும்…

யாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் கொலை!

சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ஆயுதம் ஒன்றினால்…