மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம்; ஒன்றுதிரண்ட மக்கள்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்திற்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகியது. மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள்,…

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்திற்கான தட்டுப்பாடே இதற்கான காரணமென இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதிக்காக கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் திருத்தங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை…

மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் ‘Mephedrone’ போதைப்பொருளென உறுதி

வெலிகமையில் மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் ‘Mephedrone’ எனும் அபாயகரமான போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளரால் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டமைக்கு அமைய இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென தென் மாகாணத்திற்கு…

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

மாவனெல்ல – அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீடொன்றுக்கு அருகில் மதில் சுவரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீதே இன்று(29) முற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. பொலிஸார், பிரதேச மக்கள், மாவனெல்ல பிரதேச செயலக…

கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா 01 மில்லியன் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…

கரூர் சம்பவம்; உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 20 இலட்சம் நிதியுதவி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். மேலும், “இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின்…

மகளிர் உலகக் கிண்ண தொடர்: முதல் போட்டியில் இலங்கை – இந்தியா மோதல்

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் (30) ஆரம்பமாகும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதன்படி குறித்த தொடரானது நவம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர்…

நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இன்று(28) அதிகாலை இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர்…

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கோப் குழு அழைப்பு

கோப் என அழைக்கப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கீழுள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 02ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அரச நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், அந்த நிறுவனங்களின்…

விஜயின் அரசியல் கூட்டத்தில் 31 பேர் பலி

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் நோயாளர் காவு வண்டி மூலம்…