Category: உள் நாட்டு செய்திகள்

பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈட்டை துரிதப்படுத்த நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயக் காப்பீட்டின்…

ஆபத்தான மரங்களை அகற்ற அவசர இலக்கங்கள் அறிமுகம்

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக வீதித் தடைகள் அல்லது அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அகற்றப்பட வேண்டிய மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,…

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை, 25,000 ரூபாவாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் கலாநிதி…

நிவாரணக் குழுக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும் எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் வருகை தருவது அந்தப் பணிகளுக்குத் தடையாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.…

அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி சாரதிகள் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால் குறித்த…

மன்னாரில் வௌ்ளம் – 157 பேர் கடற்படையினால் மீட்பு

பலத்த மழை காரணமாக மன்னார் – இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 157 பேர் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, மன்னார் இலுப்பைக்கடவை…

சிலாபம் வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடல்

கனமழை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வைத்தியசாலை தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், வைத்தியசாலைக்குள் ஐந்து அடிக்கும் மேல் நீர்…

வட்டுவாகல் பாலம் இரு இடங்களில் உடைப்பெடுப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு நகரத்தை அடைவதற்கான முக்கிய நுழைவாயில் பாதையாகும். முல்லைத்தீவிலிருந்து பரந்தன் வரையான வீதியில் நந்திக்கடல்…

சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691 குடும்பங்களை சேர்ந்த 12304 பேர் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1914 குடும்பங்களை…

நிவாரணப் பணியின் போது உயிரிழந்த விமானி குறித்து உருக்கமான பதிவு

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று…