Category: உள் நாட்டு செய்திகள்

கலடுவாவையில் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது.

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின்…

பாடசாலை ஒழுக்கம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை!

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப்…

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.அத்துடன், வாகனச்…

தலைமன்னாரில் பனைத் தோப்பில் பாரிய தீப்பரவல்!

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பனைத் தோப்பொன்றில், நேற்று (31) காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.…

உயர் தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.நேற்று (31) இரவு உயர்தரப்…

கொத்தலஹிம்புட்டுவை கடத்த முயன்ற சீனப் பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் இன்று (31) அதிகாலை பணியாற்றிய சுங்க அதிகாரிகளால், கொத்தலஹிம்புட்டு (Kothala Himbutu) தொகையை சட்டவிரோதமாக சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தேயிலை வர்த்தக…

நீருக்கடியில் இயங்கிய சட்டவிரோத மதுபான நிலையம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரயாதீவு பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில்…

பெலாவியா விமான சேவை ஏப்ரலில் மத்தளைக்கு

பெலாரஸ் நாட்டின் பெலாவியா விமான சேவை, ஏப்ரல் மாதத்தில் மின்ஸ்க் தேசிய விமான நிலையத்திலிருந்து மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் வரை விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மத்தள வரையான இந்த விசேட விமானப் பயணங்கள் ஏப்ரல் 3…

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல்

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது.தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும்…

ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகள் நியமனம்: விண்ணப்பங்கள் கோரல்!

ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதியுடன் தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் பட்டதாரிகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்படுவதாக…