Category: வெளிநாட்டு செய்திகள்

அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிப்பு

காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும்…

பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள்

ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்தார். அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும்…

பிரான்சின் பிரதமாராக மீண்டும் செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார். பதவியேற்ற சில வாரங்களில், தமது பதவியை கடந்த திங்கட்கிழமை இராஜனாமா செய்த, 39 வயதான செபாஸ்டியன் லெகோர்னு, தற்போது புதிய அமைச்சரவையை உருவாக்கும் பணியில்…

காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் தொடர்ந்து, காசாவில் இன்று காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக,…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்…

காசா தொடர்பில் ஐ.நா வௌியிட்ட அதிர்ச்சி ரிபோர்ட்!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.…

அமெரிக்க நிர்வாக முடக்கம் தொடர்கிறது

அமெரிக்க அரச நிர்வாக முடக்கம் இரண்டாம் வாரத்திலும் நீடிக்கின்றது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதற்கான அறிகுறியும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிதி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஜனநாயகக் கட்சியினரின் பழைய…

இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள் திறப்பு

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கடல் அட்டைகள்

இலங்கைக்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஒரு தொகை கடல் அட்டைகளை தமிழகம் – ராமநாதபுரம் பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் நேற்று (4) இரவு 250 கிலோகிராம் கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு…

மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்!

மறு அறிவிப்பு வரும் வரை, தவெக சார்பில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டாமென மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் நடைபெற்ற விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக…