Month: November 2025

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (5) அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு…

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார்…

யானைகளை வனங்களுக்கு விரட்டும் நடவடிக்கை அமைச்சுக்குத் தெரியாது

ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் செயற்படுத்தப்படும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைக்கு சுற்றாடல் அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை, அது குறித்து அறிவிக்கவும் இல்லை என்று அவ்வமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், இந்த “யானை விரட்டும் நடவடிக்கை” குறித்த…

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு

இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற மற்றும் மிகப்பெரிய பயண வழிகாட்டி நிறுவனமான ‘லோன்லி பிளானட்’ (Lonely Planet) வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான உலகில் சுற்றிப்பார்க்க வேண்டிய சிறந்த 25 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் தெரிவாகி,…

கட்டுக்குறுந்த கடற்கரையில் 30,000,000/- பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்குறுந்த கடற்கரையில் இருந்து இன்று (05) காலை மீட்கப்பட்டது ஹஷிஷ் போதைப்பொருள் என தற்போது தெரியவந்துள்ளது. அங்கு சுமார் 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன், அதன் பெறுமதி 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாகம்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் சுனாமி ஒத்திகை!

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் சுனாமி ஒத்திகைப் பயிற்சி இன்று (05) காலை பருத்தித்துறை மெதடிஸ்த் பெண்கள் பாடசாலையில் ஆரம்பமானது. காலை 9:15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவிகள்…

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.…

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.…

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த…

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03)…