தேசிய ஆபத்தானபோதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (National Dangerous
Drugs Control Board) மற்றும் மன்னார் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிலையம் (ATI Mannar) இணைந்து உயர்தொழினுட்பவியல் கற்கை மாணவர்களிற்கான “ஆபத்தான போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி” 06.11.2025 இன்று வெற்றிகரமாக
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக 54ஆம் காலாட்படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் A.M.C. அபேகோன் RWP RSP USP ndc (Major General A.M.C. Abekoon RWP
RSP USP ndc) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக வடமாகாண புனர்வாழ்வு பணியகத்தின்
புனர்வாழ்வு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் W.P.T. பெரேரா (Lieutenant Colonel W.P.T.
Perera) அவர்கள் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் மூலவளப் பேச்சாளராக (Resource person) தேசிய ஆபத்தான போதைப்
பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வெளிச்சேவை அதிகாரி திருமதி A. ஷி யாமினி வைலெட் (Mrs. A. Shiyamini Violet) அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு
போதைப் பொருட்களின் தீமைகள், அவற்றின் சமூக விளைவுகள் மற்றும் அதிலிருந்து
விலகி வாழ்வதன் முக்கியத்துவம் குறித்து விரிவான விளக்கமளித்தார். மேலும்,
மாணவர்கள் ஆரோக்கியமான, பயனுள்ள மற்றும் போதைப்பொருள் இல்லாத
வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டுமென வழிகாட்டினார்.

இந்நிகழ்வில் லெப்டினன்ட் கர்னல் (Lieutenant colonel) நளின் ஜயசுந்தர, மன்னார் உயர்
தொழில்நுட்பக்கல்வி நிலையத்தின் இயக்குநர் R.J. மோகன் குரூஸ்,
விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை
சிறப்பித்தனர்.

கல்வி நிலையத்தின் அனைத்து மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து
கொண்டு, போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு பெற்று,
ஒரு ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எதிர்காலத்தை உருவாக்கும் உறுதியை
எடுத்துக்கொண்டனர்.
