இன்று கார்மெல் பாத்திமா கல்லூரி பாடசாலையில் 49வது தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அவரது தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்ததோடு அவரைப் பாராட்டி உடற்கல்வி ஆசிரியர்களினால் வாழ்துப்பா ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது மேலும் அவரினால் மாணவர்களுக்கு அனுபவப பகிர்வானது வழங்கி வைககப்பட்டது. பாடசாலையின் அதிபர் அவர்களினால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
