ருஹுணு பல்கலையின் விவசாய பீட மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) நடைபெற்ற…

விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குவழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை 2,000 ரூபாவில் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த வௌிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,…

18 மலையக ரயில் சேவைகள் ரத்து

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் இன்று (20) இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று…

இன்றிரவு விண்கல் மழை!

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி…

359,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான…

பல அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் செயலிழப்பு

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட ஒரு செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள் தொடர்வதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…

ஆசிய ரக்பி தொடரில் இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஏழுவர் கொண்ட ஆடவருக்கான ஆசிய ரக்பி தொடரில் சீனாவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நேற்று இந்தப் போட்டி நடைபெற இருந்தது. மழைக் காரணமாக குறித்த போட்டி இன்று காலை ஆரம்பமானது. இந்த போட்டியில்…

சுங்கம் தடுத்துள்ள உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தல்

சிக்கல்கள் காரணமாக இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23,500 மெற்றிக் டன் உப்பை மீள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இறக்குமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. உப்பு இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலத்திற்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் தரக்…

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்

உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கட்டார் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில்…