இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார். ஈரான் அறிவிப்பு!
இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…
ஓடுதளத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் மீது மோதிய விமானம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு…
சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம்
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. “நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில…
பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பாகிஸ்தான் முதலிடம்!
2026 ஆம் ஆண்டிற்கான உலக பயங்கரவாதக் குறியீட்டின் (Global Terrorism Index) படி, உலகளவில் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக 1,139 பேர் உயிரிழந்துள்ளதாக…
தாங்க முடியாத அளவு எரிபொருள் விலை அதிகரிக்கும்?
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்தால், எதிர்வரும் மே மாதத்தில் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, எரிபொருள் பயன்பாட்டைத் தாமாகவே முன்வந்து மட்டுப்படுத்திக்…
நாட்டில் எரிபொருள் இல்லை என வதந்தி பரப்பியவர் கைது
நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாட்டில் எரிபொருள் இல்லை எனக் கூறி வெளிநாட்டவர்கள் வருகையைத் தடுத்தும், சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்…
இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: நான்கு இலங்கையர்கள் காயம்
இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கைபேசிகளில் காணொளி எடுக்க முயன்ற போதே இவர்கள் காயமடைந்துள்ளதாகத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இன்று 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல்
இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…
மயக்க மருந்து கொடுத்து பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதியினர் கைது!
மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்…
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் புதிய நடைமுறை அமுல்
QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள் பின்வருமாறு: கார்கள்: 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை…
