அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டம்
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர். மத்திய…
ஓமந்தையில் கோரவிபத்து: பெண் உட்பட 2 பேர் பலி; 15 பேர் படுகாயம்
வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம், ஓமந்தை மாணிக்கர் வளைவுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து…
நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு
நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்ததை அடுத்து, இன்று (17) மாலை முதல் அவ்வீதியுடனான போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் பெய்த பலத்த காரணமாக இந்த மண்மேடு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியை சீரமைக்கப்படும்…
வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!
அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு சிவநகரில் உள்ள 12வது சிங்க…
ஓகஸ்ட் மாதத்தில் 99,000ஐ தாண்டிய சுற்றுலா பயணிகள்
ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை மொத்தம் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 19,572 சுற்றுலாப் பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை…
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும்!
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக தற்போது அறிவுறுத்தப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்தார். விவசாய மற்றும்…
நல்லூர் ஆலயத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று (16) ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று அதிகாலை வந்த இந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஆலய சூழலில்…
காலி குமாரியை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்தும்
கரையோர ரயில் மார்க்கத்தில் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட காலி குமாரி கடுகதி ரயிலை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மருதானை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டொங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…