பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி
பாடசாலை செல்லும் மாணர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என…
அனர்த்தத்தினால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு
நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 147…
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் 09 பொது மக்களும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஒருவரும் அடங்கியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வௌியீடு
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பில், பாதுகாப்புச் செயலாளரினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிகாட்டல் தொடர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள்.
தோல்வியுடன் விடைபெற்றார் ஜோன் சீனா
கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜோன் சீனா. ‘த சூசைட் ஸ்குவாட், ப்ரீலான்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஜோன் சீனாவின் என்ட்ரி இசை பலரது ரிங்டோனாக இருந்தது. இவர் WWE…
ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்…
ரேஸில் கார் பழுது : அஜித்தின் பொசிட்டிவ் ரிப்ளே…!
நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். தற்போது மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் நடக்கும் ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் தொடரில் அவரும், அவரது அணியும் பங்கேற்றனர். போட்டி துவங்கிய சில…
பேஸ்புக் களியாட்டம் – கைதானவர்களில் NPP முக்கியஸ்தரின் மகள்!
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டமொன்றை நடத்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டவர்களில், தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பிரதி மேயரின் மகளும் இருந்தமை தெரியவந்துள்ளது. தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில்…
மெஸ்ஸியால் நடந்த விபரீதம்!
ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். இதனையடுத்து…
யாழ் சிறையின் நிவாரண உதவி- மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு
டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு…
