ஜனாதிபதியின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று…
எபோலா பரவல் தடுப்பு – கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்!
எபோலா பாதிப்புள்ள பிராந்தியங்களில் இருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், காங்கோ, தெற்கு சூடான் மற்றும் உகாண்டாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை குடிவரவு அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்றும் கனடா…
UAE அணுமின் நிலையத்தின் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபை கண்டனம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான…
தேரர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக தனி நீதிமன்றம்
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக்…
ஜனாதிபதி தலைமையில் அரச வெசாக் விழா!
இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை ‘வெசாக் வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சமஸ்த லங்கா சாசனாரக்ஷக மண்டலத்தின் வழிகாட்டலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த…
நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல்லை விற்பனை செய்ய அங்கீகாரம்
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் கையிருப்பை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அண்ணளவாக 115,000 மெற்றிக்தொன் நெல்லில், போதியளவு பாதுகாப்பு இருப்புத் தொகையைப் பேணிக்கொண்டு எஞ்சியவற்றை விற்பனை செய்யத்…
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய…
மற்றொரு தரமற்ற நிலக்கரி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில்
முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி குறித்த நிலக்கரி கப்பலின் ஏற்றுமதி அறிக்கை பிரதிகள்,…
4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (25) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் இந்த அபாய எச்சரிக்கையை விடுக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,…
இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் இந்தியாவினால் அன்பளிப்பு
இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவை…
