ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது
வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்…
பிரபல உலக குத்துச் சண்டை வீரர் மரணம்
முன்னாள் உலக குத்துச் சண்டை சம்பியனான ரிக்கி ஹாட்டன் தமது 46 வயதில் காலமானார். கிரேட்டர் மான்செஸ்டரின் டேம்சைடில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.…
இந்தியாவில் திடீர் நிலநடுக்கம்
அசாமின் குவஹாத்தியில் இன்று மாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (14) மாலை 4:41 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 5.8 மெக்னிடியுட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது வடக்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான பூட்டான் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடல்…
பெக்கோ சமனின் மற்றொரு சகாவும் கைது
தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியும் இன்று (14) கைது செய்யப்பட்டார். 39 வயதான குறித்த சந்தேக நபரை தங்காலை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சூரியவெவவில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட…
தலை,கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய சடலம்
மாரவில முது கட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கரை ஒதுங்கிய சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் எவையும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீல நிற காற்சட்டையுடன்…
21 கோடி ரூபாய் தங்க பிஸ்கட்டுகளுடன் AASL ஊழியர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு…
மித்தெனிய இரசாயனங்களில் ஐஸ் மூலப்பொருள் இருப்பது உறுதி
மித்தேனிய பகுதியில் உள்ள காணியொன்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 இரசாயன மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் (NDDCB) விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க…
நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய அடிப்படை தர பரிசோதனை
இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது. இது எதிர்வரும் மாதம் (ஒக்டோபர் 2025) முதல் அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து…
ஆசிய கிண்ணத் தொடர் – இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு இதோ!
ஆசிய கிண்ண தொடரில் நடைபெற்று வரும் தற்போதைய போட்டியில், பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய…
60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை பேருந்து நிலையம்
பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளது. புதுப்பித்தல் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 424 மில்லியன்…
