159 ஆவது பொலிஸ் தினம்; பொலிஸ் தலைமையகத்தில் இன்று விசேட நிகழ்வு
பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று (03) பொலிஸ் தலைமையகத்தில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது. 159 ஆவது பொலிஸ் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்முல்லை சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி…
ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் குணார் மாகாணம் ஜலாலாபாத் அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…
ரி20 இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷீத் கான் சாதனை
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான ரி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ரி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும்…
மத்திய அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் பலி
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…
வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு
வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்…
உலக தெங்கு தின கொண்டாட்டம் முல்லைத்தீவில்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றும் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதற்கமைய, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025” நிகழ்வு தற்சமயம்…
காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (2) முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்லும் வீதியின் போக்குவரத்து…
சூடானில் பாரிய நிலச்சரிவு; சுமார் 1,000 பேர் உயிரிழப்பு
சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள மார்ரா மலைச்சரிவுப் பகுதிக்கட்டப்பட்ட ஒரு கிராமம் நிலச்சரிவில் சிக்கி முழுதாக அழிக்கப்பட்டுள்ளது. சூடான் விடுதலை இயக்கம்/ இராணுவம் (SLM/A) எனப்படும் போராட்ட இயக்கத்தின் தகவலின்படி, சுமார் 1,000 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், ஒரேயொருவர் மாத்திரம் உயிருடன்…
இலத்திரனியல் மயப்படுத்தப்படும் யாழ் நூலகம்; ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பு
யாழ்ப்பாண நூலகத்தை இலத்திரனியல் நூலகமாக (e-Library) அபிவிருத்தி செய்யும் திட்டம் நேற்று (01) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, யாழ்ப்பாண பொது நூலகத்திற்காக jaffna.dlp.gov.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் யாழ்ப்பாண பொது நூலகத்தில்…
