வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை…
கடன் உச்ச வரம்பை மட்டுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி அதிரடி
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை, அண்மைக்கால நாணய…
பொருளாதாரத் தீர்மானங்களை எடுப்பதில் தலைக்கனம் வேண்டாம் – சஜித்
இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதாரத் தீர்மானங்களை எடுப்பதில் தலைக்கனத்தை கைவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்தகட்ட உடன்படிக்கையை உடனடியாக எட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்தை…
நாணய அச்சிடல் 2.1 ட்ரில்லியன் ரூபாவை கடந்தது
இலங்கை மத்திய வங்கியின் ஒருங்கிணைந்த பரந்த பணப்புழக்கம் (நாணய அச்சிடல்) 2.1 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 17 மாத காலப்பகுதியில் மட்டும் புழக்கத்திலிருந்த நாணயத்தின் அளவு 303,956 மில்லியன் ரூபாவினால்…
சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை!
இலங்கைப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 5ஆவது இடத்தில் உள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும் 12 அதிநவீன கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வைத்தியசாலைக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கு மேலதிகமாக, அடுத்த மாதத்திற்குள் மேலும்…
இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது
இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர்…
சீரற்ற வானிலையால் 27,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் இன்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…
கடற்கரையில் மீட்கப்பட்ட துண்டிக்கப்பட்ட மனித தலை!
அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (23) காலை அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே…
சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து 82 பேர் பலி!
வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மே 31 முதல் அமுலுக்கு வருகிறது புதிய தடை!
அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மே 31ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்றை கடந்த 15ஆம் திகதி அமைச்சகம்…
