ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் அமுலுக்கு
பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் உடன் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு நேற்று…
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணியின் போது…
🎙️ இன்றைய ராசிபலன் (11.09.2025 – வியாழக்கிழமை, ஆவணி 26)
✨ சந்திரன் கன்னி ராசியில் பயணிக்கிறது. சிந்தனைக்கும், தீர்மானத்திற்கும் உகந்த நாள்! ♈ மேஷம்உங்கள் உழைப்பால் வெற்றி கிடைக்கும். பணியில் மேலதிகாரிகளின் பாராட்டு.💼 வேலை – முன்னேற்றம்🪙 பணம் – வருமானம் கூடும்❤️ காதல் – இனிய நேரம் ♉ ரிஷபம்குடும்பத்தில்…
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம்!
நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூகநல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை…
கட்டார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்கு…
நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
நேபாள ஜனாதிபதி பதவி விலகினார்
நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடேல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் இடம்பெற்று வரும் கடுமையான மக்கள் எதிர்ப்புகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் விமான நிலையம் மூடல்
நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA)அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையை கண்டித்து…
நேபாளத்தில் ஜென் Z போராட்டம்- 19 பேர் உயிரிழப்பு
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து இந்த தடை உத்தரவை நேபாள அரசு மீள பெற்றுள்ளது.…
யாழில் வாள் வெட்டு – ஒருவர் காயம்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் பிரவேசித்தவர்கள் இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த…
