Category: உள் நாட்டு செய்திகள்

வட்டக்கச்சி- பரந்தன் மக்களுக்கான பாதுகாப்பு தகவல்

இரணைமடு 39′ தாண்டி உயர்ந்து வருகிறது (29.11.2025 அதிகாலை 3.00am)அத்தனை கதவுகளும் திறந்துள்ளன, அணையின் வால்கட்டு (breaching section for emergency) வெட்டப்பட்டுள்ளது, நீர் வரத்து அதிகமாக உள்ளது. நீர் மட்டம் 39 அடியை மீறினால் மேலதிக நீர்வெட்டி விடப்பட்ட வால்க்கட்டினூடாக…

உயிர் காப்புப் பணிகளுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகப் பொலிஸார் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமை காரணமாக, உயிர் காப்புப் பணிகளுக்கும் மற்றும் எந்தவொரு அனர்த்த நிலைமையிலும் ஈடுபடுத்தப்படுவதற்காகப் படகுகளுடன் கூடிய பொலிஸ் கடற்படைப்…

கம்பஹா நகரத்திற்கு பாரிய வௌ்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த 6 மணித்தியாலங்களுக்குள் கம்பஹா நகரத்திலும், அதனை அண்மித்த அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா வடிநிலங்களில் உள்ள தாழ் நிலப் பகுதிகளிலும் பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு-கண்டி பிரதான வீதி கேகாலையில் மூடல்

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…

மண்சரிவு காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்த முக்கியப் பிரதான வீதியில்…

இயற்கை சீற்றத்தால் இதுவரை 56 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய்

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை விரைவாக…

123 வருடம் பழைமையான பெந்தர பாலம் இடிந்து விழுந்தது

மூடப்பட்டிருந்த பெந்தர பழைய பாலம் நேற்று (26) இரவு முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. 1902 ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம், காலி வீதியில் மேல் மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய இடமாகும். சில வருடங்களுக்கு முன்னர் இந்தப்…

மோசமான வானிலை – உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்த நிலைமையால் 21 பேர் காணாமல்…