Month: August 2025

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் யாத்ரீகர்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் சார்பில் ஏ.எம்.எம்.…

பிள்ளையானின் ஆதரவாளரை மட்டக்களப்பில் சுற்றிவளைத்த சி.ஐ.டி

மட்டக்களப்பில் பிள்ளையானின் சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (24) குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்னையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு…

பூண்டுலோயா டன்சினன் தோட்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

தலவாக்கலை பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவில் அமைந்துள்ள தோட்ட லயன் குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (25) ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் 4 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது, மேலும் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக நுவரெலியா மாவட்ட அனர்த்த…

ஊடகவியலாளர்களுக்கு விரைவில் காப்புறுதி திட்டம்

அடுத்த வருடம் ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அசி திசி ஊடகவியல் புலமைப்பரிசில் திட்டத்தின் 2025 புலமைப்பரிசில் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (22)…

முன்னாள் ஜனாதிபதி ரணிலை உடனடியாக விடுவிக்க வேண்டும்- எரிக் சொல்ஹெய்ம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், அழைப்பு விடுத்துள்ளார். விளக்கமறியலில் இருக்கும் போது அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளார்.…

தீவிர வைத்திய கண்காணிப்பின் கீழ் ரணிலுக்கு சிகிச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர வைத்திய கண்காணிப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் உள்ள…

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 3ஆம் பகுதி அகழ்வு பணிகள் நாளை (25) முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில்…

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில்

சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள்…