Month: November 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு: நாடு முழுவதும் 206 வீதிகள் தடை

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு முழுவதும் பல வீதிகள் மற்றும் பாலங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். அதன்படி, பிரதான வீதிகள் உட்பட நாடு…

சீரற்ற வானிலை: உயிரிழப்பு 153, காணாமல்போனோர் 191

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (29) மாலை 6.00 மணிக்கு அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில்…

இன்று மாலைக்கான ரயில் சேவை அட்டவணை அறிவிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (29) மாலைக்கான ரயில் சேவை அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ரயில் சேவைகளை பின்வருமாறு முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது: களனிவௌி ரயில் மார்க்கம்: கொழும்பு கோட்டை – பாதுக்கை வரை: பி.ப. 04.25 – சாதாரண ரயில்…

மகா ஓயாவை அண்மித்த பகுதிகளில் கடும் வௌ்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் 24 மணி நேரத்தில் மஹா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் மிக அபாயகரமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகா ஓயாவை அண்மித்த மேட்டு நிலப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த நிலைமை…

வட்டக்கச்சி- பரந்தன் மக்களுக்கான பாதுகாப்பு தகவல்

இரணைமடு 39′ தாண்டி உயர்ந்து வருகிறது (29.11.2025 அதிகாலை 3.00am)அத்தனை கதவுகளும் திறந்துள்ளன, அணையின் வால்கட்டு (breaching section for emergency) வெட்டப்பட்டுள்ளது, நீர் வரத்து அதிகமாக உள்ளது. நீர் மட்டம் 39 அடியை மீறினால் மேலதிக நீர்வெட்டி விடப்பட்ட வால்க்கட்டினூடாக…

உயிர் காப்புப் பணிகளுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காகப் பொலிஸார் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமை காரணமாக, உயிர் காப்புப் பணிகளுக்கும் மற்றும் எந்தவொரு அனர்த்த நிலைமையிலும் ஈடுபடுத்தப்படுவதற்காகப் படகுகளுடன் கூடிய பொலிஸ் கடற்படைப்…

கம்பஹா நகரத்திற்கு பாரிய வௌ்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த 6 மணித்தியாலங்களுக்குள் கம்பஹா நகரத்திலும், அதனை அண்மித்த அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா வடிநிலங்களில் உள்ள தாழ் நிலப் பகுதிகளிலும் பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு-கண்டி பிரதான வீதி கேகாலையில் மூடல்

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…

மண்சரிவு காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்த முக்கியப் பிரதான வீதியில்…