Month: November 2025

இயற்கை சீற்றத்தால் இதுவரை 56 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய்

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை விரைவாக…

123 வருடம் பழைமையான பெந்தர பாலம் இடிந்து விழுந்தது

மூடப்பட்டிருந்த பெந்தர பழைய பாலம் நேற்று (26) இரவு முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. 1902 ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம், காலி வீதியில் மேல் மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய இடமாகும். சில வருடங்களுக்கு முன்னர் இந்தப்…

மோசமான வானிலை – உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்த நிலைமையால் 21 பேர் காணாமல்…

உதவி எண்கள் – மாவட்ட அனர்த்த மேலாண்மை ஒருங்கிணைப்புப் பிரிவுகள் (DDMCU)

📞 உதவி எண்கள் – மாவட்ட அனர்த்த மேலாண்மை ஒருங்கிணைப்புப் பிரிவுகள் (DDMCU) 📞*முயற்சி, பாதுகாப்பு, பதிலளிப்பு! | 📍 மாவட்டம் | ☎️ அலுவலக எண் | 📱 கைபேசி எண் | 📧 மின்னஞ்சல் || யாழ்ப்பாணம் |…

இன்று தளபதி பிரபாகரன் பிறந்த நாள் – உலகெங்கும் தமிழர்கள் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 26), உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவரை நினைவுகூரி, மலர்வணக்கங்கள் செலுத்தி வருகிறார்கள். வட அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்கள்,…

உர மானிய விலை தொடர்பில் தீர்மானம்

உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறைப்படியான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில்…

நாட்டில் 365,951 பேர் வேலையற்றிருப்பதாகப் பிரதமர் அறிவிப்பு

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

தாய்லாந்து வௌ்ளத்தால் 33 பேர் பலி

தாய்லாந்தின் பல பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு தாய்லாந்தில் ஒன்பது மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடர் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதியில்,…