2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்
2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு நேற்று (22) பாராளுமன்றத்தில் கூடியபோது,…
ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா!
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி…
விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி
பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம்…
மீண்டும் நாளை சேவையில் ஈடுபடவுள்ள ரயில்கள்
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் மார்க்கத்தில் நாளை (23) முதல் பல ரயில்களை மீண்டும் இயக்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கண்டியில் இருந்து கொழும்பு கோட்டைக்கும், கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கு செல்லும் பல…
இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி
நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு…
சீரற்ற வானிலை – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன்,…
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை 10.20 மணியளவில் வெலிகம பிரதேச சபையில் உள்ள அவரது அறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரில் ஒருவர் கடிதம் ஒன்றில் கையெழுத்தை பெற்றுக்கொள்வதை போல்…
கொழும்பின் பல பகுதிகளில் 10 மணி நேரம் நீர் வெட்டு
கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் நாளை (23) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை காலை 10.00 மணி முதல்…
இறக்குமதி அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை நிர்ணயம் அதன் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை…
