சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் இன்று (4) போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில்…

இலங்கை சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுக்கிறது – உயர்ஸ்தானிகர்

இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் சார்ந்து நிற்கக்கூடிய பங்காளியாக, இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக்…

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து,…

இங்கிலாந்து, இலங்கைக்கு நிர்ணயித்த வெற்றியிலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (3) இடம்பெறுகின்றது. பல்லேகலையில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்து. இதன்படி…

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.…

இந்திய பொருட்களுக்கான வரியை குறைத்த அமெரிக்க ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிற்குத் தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும். ட்ரூத்…

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் 1954 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாண்டு இருதரப்பினர்களுக்கிடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 72…

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு

அனைவரின் தொழில்முறை கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளை இன்று (3) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய…

சி.சி.டி.வியில் பதிவான கோர விபத்து

எஹெலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (26) காலை 10.00 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி நிறுத்தி…