பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கான தடை உத்தரவில் திருத்தம்

பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து…

மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்

வணிக ரீதியாகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் “இஞ்சி” பயிற்செய்கைக்கு ஏக்கருக்கு 200,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்…

சொபதனவியின் 350 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைப்பு

கெரவலப்பிட்டியவின் சொபதனவி (LNG) மின் உற்பத்தி நிலையத்தின் 350 மெகாவோட் மின்சாரம் சற்றுமுன்னர் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரியவும், எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நீர்வெட்டு அறிவிப்பு மீளப்பெறப்பட்டது!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கமைய, அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் வழமைப் போல் நீர்விநியோகம் தடையின்றி நாளைய தினம் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அம்பத்தலை…

நீர் வெட்டு குறித்த அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான உள்ளீட்டு பம்பிங்…

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.

நெடுந்தீவு வாள்வெட்டு – இருவர் காயம் – பொலிஸார் மீதும் தாக்குதல்

நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகிறதாவது… நெடுந்தீவு மதுபானசாலையில் இன்று இரவு 7.00 மணியளவில்…

கடவத்தை – மீரிகம அதிவேக வீதி கட்டுமானம் இன்று ஆரம்பம்

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, கடவத்தை இன்டர்சேஞ்ச் மற்றும் அதிவேக வீதியின் முதல் 500…

நாட்டின் எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க புதிய திட்டம்

நாட்டின் எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க ஆறு புதிய எரிபொருள் தொட்டிகளை நிறுவும் பணிகளைத் தொடங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். கடந்த காலங்களில் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் தொட்டிகளின் கட்டுமானப் பணிகளை…

40,000 மெட்ரிக் தொன் கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி

சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், கீரி சம்பா பற்றாக்குறை குறித்து ஊடகவியலாளர்கள்…